Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 18 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவினதும் அமெரிக்கவினதும் சர்வதேச அழுத்தம், அரசியல் தீர்வுக்கான அழுத்தம் தொடர்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும்.
இல்லாது போனால் அரசின் செயல்களை வாக்காளர் மீதான அச்சுறுத்தல்களை, தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்காமல் இருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுகொண்டதாகவே கருதப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ந.குமரகுருபரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இதுவரை குற்றச்சாட்டு எதுவுமின்றி வருடக்கணக்காக விளக்கமறியலில் வாடும் உடன்பிறப்புகளையும் எண்ணிப்பாருங்கள். எனவே வரலாற்று தவறை தமிழினம் ஒருபோதும் செய்யமுடியாது. செய்யக்கூடாது. எமக்காக கருணை கொள்ளும் இந்தியாவை, சர்வதேச நாடுகளை, அமெரிக்காவின் பார்வையை ஏமாற்றகூடாது.
யுத்தத்தின் துன்பத்திலிருந்து விடுபடவில்லை எல்லாம் முடிந்தது, இனி என்ன என்று வாக்களிக்காமல் இருப்பதும் அரசிற்கு சாதகமாகவே அமையும். வாக்களிப்பு குறைந்தால் அரசாங்கத்துக்கு வெற்றி வாய்ப்பு கூடும்.
எனவே தமிழ் மக்கள் தமது வரலாற்று கடமையை செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். இது ஒரு முக்கியமான தேர்தல் என்பதையும் தார்ப்பரியதையும் புரிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பை உங்கள் சக்தி வாய்ந்த பிரதிநிதிகள் என உலகறிய செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்' என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago