Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன், கவிசுகி, தாஸ்)
நல்லூரை தலைநகரமாகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலி மன்னனின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட உருவச்சிலை, யாழ். நல்லூர், முத்திரைச் சந்தியில் இன்று புதன்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந்த சிலை திறப்புவிழா நிகழ்வின் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழிகள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலந்துகொண்டு சங்கிலி மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்ததுடன், நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.
சமயத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாகளான சில்வேஸ்திரி அலென்ரீன், மு.சந்திரகுமார் உட்பட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்னம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளும்கட்சி உறுப்பினாகள், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் றெமேடியஸ் உட்பட பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
58 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago