2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஊடகவியலாளர் குகநாதன் மீதான தாக்குதல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில்  பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் முதலாவது அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரான ஞானசுந்தரம் குகநாதன் கடந்த ஜுலை மாதம் 29ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஞானசுந்தரம்  குகநாதன்  தற்போதுஆபத்தான கட்டத்தை தாண்டிய நிலையில் குணமாகி வருவதாக யாழ். வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. (DM)


  Comments - 0

  • mauni Wednesday, 03 August 2011 05:01 PM

    கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க, சிவராம் போன்றவர்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டது? தாக்கப்பட்ட கீத் நோயார், போத்தல ஜயந்த போன்றவர்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டது? சிரச, எ.பீ.சி. ஊடக வலையமைப்பு போன்றவற்றுக்கு என்ன நீதி வழங்கப்பட்டது? அதே நீதி தான் இவருக்கும் வழங்கப்படும், குற்றவாளி யாரென்று தெரிந்தாலும் கூட. நாளைய நாட்களிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவார்கள் என்று உறுதியாக நம்புவோமாக! இது தொடர் கதை என்பதை மறக்காமல் இருப்போமாக! - மௌனி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X