2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விடயமே: டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் எனது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை அவர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விடயமே என்பதுடன் அதற்கு சில விசமிகளால் அரசியல் சாயம் பூசப்படுவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். முத்திரைச் சந்திப்பகுதியில் அமையப்பெற்றுள்ள நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் இராசதானியை ஆட்சி செய்த கடைசி அரசனான சங்கிலி மன்னனின் சிலை திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'சங்கிலி மன்னனின் உருவச்சிலை மட்டுமன்றி மந்திரிமனை நுழைவாயில், ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படவுள்ளன.

தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், சமயப் பெரியார்கள், சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும் மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன் பண்பாடுகளைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றார்.

யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமயத் தலைவர்கள், யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலென்ரின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • NAKKIRAN Thursday, 04 August 2011 03:51 AM

    சிலைகள் நிறுவுவது பழைய காலம் . இது மிலேனியம் புது யுகம் . இடத்தையும் பணத்தையும் நேரத்தயும் வீணாக்காதே.

    Reply : 0       0

    ruban Thursday, 04 August 2011 05:29 AM

    இது எதிர்பார்த்த ஒன்று தான்.

    Reply : 0       0

    கரன் Thursday, 04 August 2011 08:37 AM

    நன்றி அமைச்சரே, சனாதிபதி விசாரணை ஆரம்பிக்க உத்தரவிட்டிருக்கிறார். முடிவு தெரிய முன்னர் நீங்களே அதற்குத் தீர்ப்புக் கூறியிருக்கிறீர்கள். வாழ்க உங்கள் சனநாயகம்.

    Reply : 0       0

    vaasahan Sunday, 07 August 2011 09:02 PM

    இந்த விடயத்துக்கு இப்படி ஒரு தீர்ப்புக் கூற ஒரு அரசியல் தலைமையும் ஒரு அமைச்சருமான ஒரு பெரிய ஆளுமை தேவைப்படுகிறதோ? அப்படியாயின் அதனுள் என்னவாச்சும் இருக்குமோ ?

    Reply : 0       0

    NAINAI NATHAN Monday, 08 August 2011 09:23 PM

    ஒரு உணர்வற்ற ஒற்றை கோடாரிக்காம்பின் செயல் தமிழ் மக்களை அடக்கி எதிர்காலத்தை அடிமை வாழ்வாக்குவதே. இனியாவது உருப்படியாக ஏதாவது செய்யும் காணும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X