2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தின்போது தமிழ் பொலிஸார் கடமையாற்றுவர்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் முதல் நல்லூர் உற்சவகாலத்தின் இறுதி நாள் வரை ஆலய பகுதியில் தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார்.

நல்லூர் ஆலயத்தின் வீதிகளில் கண்காணிப்பு வீடியோ கமராக்கள் பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் விசேட பொலிஸ் சேவை நல்லூர் ஆலயச் சூழலில் ஏற்படுத்தப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களும் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்க்குமாறும் திருடர்கள் சனநெரிசலைப் பயன்படுத்தி திருட்டு வேலைகளில் ஈடுபடுவதற்கு இடம் கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X