Super User / 2011 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் இன்று தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழத்தில் இவ்வளவு காலமாக இயங்கி வந்த விவசாய பீடம் கிளிநொச்சியில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு விடப்பட்டடு இருந்தது.
அதேவேளை இதே இடத்தில் பொறியியல் பீடத்தையும் தற்காலிகமாக இயங்கவைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரிய பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.
விவசாய பீடத்தை இயக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ள அறிவியல் நகர் பகுதி 168 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
59 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
4 hours ago