2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அகில இலங்கை சைவ மாநாடு நேற்று ஆரம்பம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ்.சைவ பரிபால சபையின் எற்பாட்டில் நடைபெறும் அகில இலங்கை சைவ மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வண்னை சிவன்கோவிலில் இடம்பெற்ற கோவில் வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.

நீராவியடி நாவலர் ஆச்சிரமத்தில்  முனைவர் நல்லூர் சா.சரவணன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது, பண்டிதர் சு.பேரின்பநாதனின் திருமறை ஓதலைத் தொடர்ந்து தேவார இசைமணி இராசையா திருஞானசம்பந்தனின் பண்ணிசை நிகழ்வு இடம் பெற்றது.

தொடர்ந்து சைவப் புலவர் திருஞானசம்பந்தபிள்ளையின் வரவேற்புரையும் நல்லை ஆதீன குரு முதல்வா ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பராமாச்சிரிய சுவாமிகளின் ஆசியுரையும் அன்பே சிவமாய என்னும் பொருளில் கருத்துரையும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X