2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ்.சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி சி. சிவராணி தெரிவித்துள்ளார்.

 

யாழ்.மாவட்டத்தில் இவ்வாரத்தில் நான்கு பேர் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில் இணுவிலைச் சேர்ந்த ஒருவரும் நல்லூரில் மூவரும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்

கடந்த மாதங்களில் அதாவது ஏப்ரல் மாதத்தில் 6 பேரும், மே மாதத்தில் 6 பேரும், ஜீனில் 7 பேரும்,  ஜீலையில் 11 பேரும் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்

டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் யாழில் பொதுவானதாக இல்லை எனவும் மக்களின் ஒத்துழைப்பும் பெரியளவில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X