Super User / 2011 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் நோயாளரை பார்வையிட வந்தவர்களுக்குமிமையில் இன்று சனிக்கிழமை மாலை கைகலப்பொன்று இடம் பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளரைப் பார்வையிட வருவர்கள் அனுமதிச் சீட்டை இருந்தால் மாத்திரம் பார்வையிட முடியும். ஆனால் அனுமதி சீட்டை இன்றி தங்களை அனுமதிக்கு மாறு கோரி நோயாளர்களை பார்வையிட வந்தவர்கள் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் கைகலப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட நோயாளரை பார்வையிட வந்த சிலரையும் கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
58 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago