2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நல்லூரில் பத்தர்களின் தங்கநகைகளை திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் பக்தர்களின் தங்க ஆபரணங்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்படும் இருவர் நேற்று சனிக்கிழமை மாலை கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர்த் திருவிழாவுக்கு வந்த பக்தர்களின் தங்க ஆபரணங்களை நூதனமான முறையில் திருடியதாகத் தெரிவிக்கப்படும் இருவர் பொதுமக்களின் உதவியுடன் ஆலய வளாகத்தில் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் கூறியுள்ளனர்

இதேவேளை, நல்லூர்த் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் நேற்று சனிக்கிழமை  ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X