2025 மே 19, திங்கட்கிழமை

கோப்பாயில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,கவிசுகி,கிரிசன்)

யாழ். கோப்பாய் பகுதியில் பனை மரமொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் இன்று புதன்கிழமை காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில்  ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான  (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த  (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் காணப்படும் இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் சைக்கிள், பாதணிகள், கையடக்கத் தொலைபேசி, கைமணிக்கூடு ஆகியன ஆங்காங்கே  சிதறுண்டு காணப்படுவதுடன், மருந்துச் சிட்டையும் எக்ஸ்ரே அட்டையும் குறித்த சைக்கிளில்  தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே வெவ்வேறு நபர்களை திருமணம் முடித்து பிள்ளைகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X