2025 மே 19, திங்கட்கிழமை

கொலை செய்யப்பட்ட பின்னரே இரு சடலங்களும் தூக்கிலிடப்பட்டன: வைத்திய பரிசோதனை அறிக்கை

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோப்பாய் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்ட ஆணொருவரும் பெண்ணொருவரும் கொலைசெய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் இவர்களின் உடம்பில் உட்காயங்கள் பல காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதப் பிசோதனைகளை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் சிவரூபன் தெவித்துள்ளார்.

கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில்  ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  மீட்கப்பட்டனர்.   

இன்று இந்த இரு சடலங்களினதும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை யாழ். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X