Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடகிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சிமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயனடையும் வகையில் இருநாள் பயிற்சிப் பட்டறைகளை வலய ரீதியாக எதிர்வரும் 16ஆம் திகதி முதல் யாழ். சிந்தனைக்கூடம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் நடத்தவுள்ளது.
வடகீழ் மாகாணங்களை உள்ளடக்கியதான வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் வசதியான கருத்தரங்கு மண்டபங்களில் மேற்படி இருநாள் பயிற்சிப்பட்டறைகள் நடைபெறவுள்ளன.
இலங்கையில் உள்ளூராட்சி முறைகள், ஒழுங்கமைப்புகள், சட்டப்பாதிப்பு, பொறுப்புக்கூறல், உள்ளூராட்சி அதிகாரங்கள், உறுப்பினரது கடமையும் பொறுப்புக்களும் நிதி முகாமைத்துவம், உள்ளூராட்சியும் நல்லாளுகையும் தத்தமது பிரதேசங்களுக்கு கிடைக்கும் வளங்களை இனங்காணலும் பயன்பாடும் விவசாய, கால்நடை, மீன்பிடி, அபிவிருத்தி, பனைவளப் பயன்பாடு, கைத்தொழில் விருத்தி, நூலக அபிவிருத்தி, மரபுரிமைச் சொத்துக்களைப் பேணுதல், சூழலைப் பேணுதல், சுகநலனை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் உரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.
இப்பயிற்சிப்பட்டறையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், துறைசார் விரிவுரையாளர்கள், தொழில்நுட்பக்கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த துறைசார் நிபுணர்கள், வைத்தியக் கலாநிதிகள், பொறியியலாளர்கள், சூழலியலாளர்கள் என்போர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
மேற்படி பயிற்சிப்பட்டறைக்கான ஏற்பாடுகளை சிந்தனைக்கூடத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் மேற்கொண்டு வருகின்றார். கட்சிபேதமின்றி எமது உள்ளூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படுவரெனவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கும் (0094) 021 222 3274 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
26 minute ago
41 minute ago