Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இனந்தெரியாத நபர்களின் நடமாட்டத்தினால் பீதியடைந்துள்ள மக்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் நாவாந்துறை, சூரியவெளி, கொட்டடி, பண்ணை, வண்ணார்பண்ணை, சின்னக்கடை, குருநகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சைக்கிளில் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.
நடந்து முடிந்த கசப்பான சம்பவங்கள் மனவேதனையளிப்பதாகவும் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவான நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா கூறினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவுடன் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago