2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஏழாலையில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம்  ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.

மண் ஏற்றும் லொறியில் கடமையாற்றும் இவர் தனது லொறியை நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு குளிப்பதற்காக மோட்டரைப் போட்ட வேளையில் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்

இவருடைய சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு  பின்னர் அங்கிருந்து  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக  வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X