2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சுயவிருப்பின் பெயரில் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை: புலி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தால் விடுதலை

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பெயரில்  கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் கடந்த புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுய விருப்பின் பெயரில் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்து யாழ். மேலதிக நீதவான் எஸ்.பரமராஜா நிரபராதி என தீர்ப்பு வழங்கி விடுதலை செய்தார்.

ஓமந்தையில் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றுக்கு 2010ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

இதனையடுத்து யாழ். மேலதிக நீதவான் எஸ்.பரமராஜா முன்னிலையில் நேற்று முன் தினம 14ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இவர்களிடமிருந்து சுய விருப்பின் பெயரில் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்து நீதவான் நிரபராதி என தீர்ப்பு வழங்கி விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இந்த வழக்கில் சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளான எஸ்.ஸ்ரீ காந்தா மற்றும் முடியப்பு றெமிடியஸ் ஆகியோர் ஆஜராகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X