2025 மே 19, திங்கட்கிழமை

மாணவியின் நெஞ்சை பிளேட்டினால் வெட்டிய இனந்தெரியாத நபர்கள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரை இடைமறித்த இனம் தெரியாத நபர்கள் சிலர், அம்மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவமொன்று யாழ், இருபாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 16 வயதுடைய மாணவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலைக்குச் செல்வதற்காக இருபாலை, வி.எச். வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி மாணவியை வயல் வெளியொன்றுக்கு அருகில் அமைந்துள்ள பாழடைந்த வீட்டின் முன்பாக சைக்கிள்களுடன் நின்றுகொண்டிருந்துள்ள இரு இளைஞர்கள், மாணவி மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது, அவ்வழியாக மேலும் சில மாணவர்கள் வருவதை அவதானித்துள்ள சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X