A.P.Mathan / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். நவாலிப் பகுதியில் திருடனின் தாக்குதலுக்குள்ளான தாதிப் பெண் ஒருவர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...
நவாலி, அரசடியைச் சேர்ந்த ராஜேந்திரன் காயத்திரி (வயது 25) என்ற பெண், யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றுகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வேலை செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அவ்வேளை யாரோ கூப்பிடும் குரல் கேட்டு வெளியில் வந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடன் அறுக்க முற்பட்டுள்ளான். திருடனை தடுக்க முற்பட்டு கூக்குரலிட்டிருக்கிறார். இதனை எதிர்பாராத திருடன் அப்பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.
படுகாயமடைந்த தாதிப் பெண் தற்சமயம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பில் நவாலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago