Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட அரசடி வீதியில் உள்ள தனியார் கிணறுகளில் இருந்து பெருமளவான பழுதடைந்த உணவுப் பொருட்கள் பொதுமக்களினால் அகற்றப்பட்டு வருகின்றன.
வலி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாவிட்டபுரம் தெற்கு ஜே.231 கிராம அலுவளர் பிரிவிலுள்ள அரசடி வீதி தனியார் கிணறுகளில் இருந்து இத்தகைய உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பச்சை அரிசி மூடைகள், குத்தரிசி மூடைகள், கொண்டல் கடலை, கௌப்பி, பயறு, மிளகு, நெஸ்பிறே பால்மா என பல்வேறு பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் இதே இடத்தில் உள்ள கிணற்றில் இருந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மூடைகள் மிட்கப்பட்டன.
இதேபோன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் ஒரு கிணற்றில் இருந்து சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மூடைகள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக யாரும் பிரயாணம் செய்ய முடியாத அளவுக்கு கடுமையான துர்நாற்றம் வீசுகின்றது.
இந்த பழுதடைந்த பொருட்களை வலி வடக்குப் பிரதேச சபை பொது மக்களின் வேண்டுதலின் பெயரில் அகற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பொருட்கள் யாவும் அண்மைக்காலத்தில் குறிப்பாக பொது மக்கள் மீளக்குடியேற அனுமதிப்பதற்கு சில காலங்களுக்கு முன்னர் கிணறுகளில் போட்டு மூடப்பட்ட பொருட்களாக இருக்கலாம் என பொது மக்கள் கூறுகின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025