Super User / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பதுளை ராகனவத்த உடப்பொத்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரான சுதுவதே கேரசிங்க (வயது 41) என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு தை மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது சுயமாக மேற் கொள்ளப்படவில்லை எனவும் அதனை ஒரு சான்றாக ஏற்கப்படமாட்டாது என நீதிமன்று குறிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து, அரச சட்டத்தரணி வேறு சான்று இல்லை எனத் தெரிவித்ததையடுத்து குறித்த குடும்பஸ்தரை விடுதலை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி திரு. பரமராஜா பணித்தார். சந்தேகநபர் சார்பில் வழக்குரைஞர் முடியப்பு றெமீடியஸ் ஆஜராகியிருந்தார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago