A.P.Mathan / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கத்திற்காக கௌரவ சுகாதார அமைச்சரினால் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரையான வாரம் தேசிய சுகாதார வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாரத்தில் பல்வேறு திணைக்களங்கள், நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு சுகநல மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எமது நாட்டு மக்களின் சுகநல மேம்பாட்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கு தங்களது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள்:
நாள் 1 (03.10.2011)
1) மாவட்ட சுகநலவார ஒருங்கிணைப்பு கூட்டம் (தலைமை – அரச அதிபர்), மாவட்ட செயலகம், அரச அதிபர் அலுவலக கேட்போர் கூடம்.
2) பிரதேச சுகநலவார ஒருங்கிணைப்பு கூட்டம் (தலைமை – பிரதேச செயலாளர்)
நாள் 2 (04.10.2011)
சிரமதான மூலமான சுத்திகரிப்பு தினம் (சகல நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொது இடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள்)
நாள் 3 (05.10.2011)
1) பாடசாலைகளில் சுகநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள்.
2) பாடசாலை மாணவர்களின் போசாக்கு மதிப்பீடு.
3) பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சுகநல விழிப்புணர்வு நிகழ்வு. (தலைமை – பிரதேச செயலாளர்)
நாள் 4 (06.10.2011)
1) சகல வைத்தியசாலைகளிலும் 35 வயதிற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை.
2) மாநகர ஃ நகரப் பகுதிகளில் பொது இடங்களையும் வடிகால்களையும் துப்புரவு செய்தல்.
3) சமூக மட்டத்தில் விசேட தேவைக்குட்பட்டோர், விசேட உதவிகள் தேவைப்படும் நோயாளர்களின் விபரங்களை திரட்டல்.
நாள் 5 (07.10.2011)
1) முதியோர்களுக்கான சுகநல விழிப்புணர்வு கருத்தரங்கு.
2) இலவச மருத்துவ பரிசோதனை.
3) விளையாட்டுப் போட்டிகள்.
நாள் 6 (08.10.2011)
வணக்கத் தலங்களை பரிபாலன சபையினரின் உதவியுடன் சிரமதான அடிப்படையில் துப்புரவு செய்தல்.
நாள் 7 (09.10.2011)
இரத்ததான நிகழ்வுகள் (மருத்துவப் பணிப்பாளர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், பொதுமக்கள்)
நாள் 8 (10.10.2011)
1) மருத்துவப் பணியாளர்களின் கலை நிகழ்ச்சிகள்.
2) சிறந்த மருத்துவ பணியாளர்களிற்கான கௌரவிப்பு.
என்பன நடைபெறவுள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago