Super User / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். மாநகர சபையின் எதிர்கால வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்திய செயற்திட்டங்களின் கீழ் மேற்கொள்வது தொடர்பான ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் 2012ஆம் ஆண்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களில் மக்களை இணைத்து யாழ். நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராயப்பட்டன.
யாழ். மாநகர சபையின் அபிவிருத்தி திட்டத்தில் மக்களை இணைந்த வகையிலான தேவைகள் குறித்த கருத்துக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆய்வரங்கில் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .