Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்ற பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைக் கொடுக்கச் செல்லும் போது கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அந்தப் பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களைக் கேட்பதாகவும் அவர்களின் வீட்டுக்கு வருகிறேன் என பெண்களை துன்புறுத்துவதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்.சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் உரிமைகளும் செய்தி அறிக்கையிடலும் என்ற தொனிப்பொருளில் யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. இந்தப் பயிற்சிப்பட்டறையில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்முறைகள் இடம்பெற்றால் ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு அதனை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும். சிறுவர்கள் மீதான உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வீடுகளில் நடைபெறும் சிறுவர் உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வருவதோடு நின்றுவிடாது அந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் ஊடகங்கள் பாடுபடவேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
'ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலில் சிறுவர்களது உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு செய்தி அறிக்கையிடலைச் செய்யவேண்டும்.
குடும்ப வன்முறைகள் யாழில் அதிகரித்துள்ளதுடன் இந்த வன்முறைகளினால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். சிறுவர்கள் மனவிரக்திக்கு செல்லவிடாது அவர்களைப் பாதுகாக்க சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் விரைந்து செயற்பட வேண்டும்.
சிறுவர்களின் உரிமைகளில் பெற்றோர்கள் பொறுப்புடனும் கண்டிப்பாகவும் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகளை மீறிச் செயற்படக்கூடாது எனக்கேட்டுக் கொண்டார்.
Mohamed Monday, 24 October 2011 10:52 PM
வேலி பயிரை மேயிற கதையா? இல்லை
மரத்தால் விழுந்தவரை மாடு மிதிக்கிற கதையா?
பாவம் எம் சமூகப் பெண்கள்!
Reply : 0 0
haisam shana Tuesday, 25 October 2011 03:32 AM
Ithu than ulaham.
Reply : 0 0
xlntgson Wednesday, 26 October 2011 06:32 PM
முறைப்பாடுகளை பதிவு செய்யும் முறை மாறவேண்டும், வீடியோ பதிவு செய்யலாம்! பொய் முறைப்பாடுகள் இல்லாமல் போகும்! நாம் ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று எழுதுவார்கள், நாம் ஒப்பம் வைக்காமலா இருப்போம், ஆரம்பமே சரி இல்லையென்றால் நீதி என்ன செய்யும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
4 hours ago