Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 27 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்காக வெளிநாடுகள் சிலவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை இன்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் இந்தியா, பிரித்தானியா, பங்களாதேஷ், நியூசிலாந்து ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர். யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த இவர்கள், யாழ்.மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற விசேட மாநாட்டிலும் கலந்து கொண்டனர்
யாழ். குடாநாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தனர். அத்துடன் வடக்கில் காணப்படும் புனர்வாழ்வு நிலையங்கள், கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள், புதிய வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் இவர்கள் ஆராய்ந்தனர்.
neethan Thursday, 27 October 2011 09:00 PM
வெளிநாட்டு எம்.பி.களினது, அபிவிருத்தி முன்னெடுப்பு மேற்பார்வையை விட புலம் பெயர்ந்து வாழும் நம்மவரது பங்களிப்பும் ,ஒத்துழைப்பும் மிக காத்திரமாக அமையும். குடா நாட்டு மக்களின் வாழ்வாதார நிலைமையிலும், அதி உச்ச நிலை மேன்பாட்டையும் புலம் பெயர்ந்தோரால் வழங்க முடியும்.
Reply : 0 0
ummpa Thursday, 27 October 2011 09:10 PM
நமது ஈழத்து சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். முடியாது என்று சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை ! நமது மக்களின் தேவைகளை கவனத்தில் எடுத்து ஒரு வெப் தளம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடக மக்களின் தேவை, ஒவ்வொரு கிராமத்துக்கும் என்ன தேவைப்படுகிறது எதனை எதிர்பார்கிறார்கள், எங்கு அவர்கள் தண்டிக்கப்படுகிரர்கள் என்பதனை எல்லாம் எப்படி எங்கு இதுபற்றி தெரிவிக்க முடியுமோ அதனை முன்னெடுத்து சொல்லுவதுக்கு இனத்துவேசம் இல்லாத ஒரு வெப் தளத்தை யாராவது முன்னெடுக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago