Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும் எனவும் தமிழ் மாணவர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதை அரசு கண்களை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்காமல் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபையில் கவனயீர்ப்பும் கண்டனப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.
இன்று வியாழக்கிழமை யாழ். மாநகர சபையின் 9ஆவது மாதாந்தக் கூட்டத் தொடர் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் விந்தனினால் சபையில் கவனயீர்ப்பும் கண்டனப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
கடந்த 16.10.2011 ஆம் திகதி பட்டப்பகலில் நட்ட நடு வீதியில் இராணுவக் காவலரணுக்கு அருகில் கந்தர் மடம் பழம் வீதியில் வைத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் மீது 6 பேர் கொண்ட குழுவினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 23.10.2011 அன்று கிளிநொச்சி பூநகரியில் வைத்து இ.கவிராஜன் என்ற யாழ்.பல்கலைக்கழக மாணவன் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
இன்று 11ஆவது நாளாக யாழ்.பல்கலைக்கழகம் பகிஷ்கரிப்பில் முடங்கியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் அவல நிலையை அரசு கவனத்தில் எடுத்து அவர்களுக்கு நீதி கிடைக்க உதவி புரிய வேண்டும். அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு அச்சுறுத்தல் விடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago
3 hours ago