Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத ஒரு சூழல் யாழ்ப்பாணத்தில் ஏற்படுமெனவும் வடமாகாண தொழில் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பிராந்திய தொழில் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்தில் சிறுவர் தொழிலாளர்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளதாகவும் க.கனகேஸ்வரன் குறிப்பிட்டார். இருப்பினும் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் தற்போது அது காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் க.கனகேஸ்வரன் குறிப்பிட்டார்.
ஏழு வயதுச் சிறுவனொருவன் கடந்த காலத்தில் கடுமையான சிறுவர் தொழிலாளியாக இனங்காணப்பட்டு அவனை தொழிலில் ஈடுபடுத்திய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் நிறுவனங்கள் தொடர்பாக அறியத்தருமாறும் அவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதாக தகவல் கிடைக்கப்பெறின் குறித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடமாகாண தொழில் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .