Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 31 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நவாலிப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கள் கிழமை நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். நவாலி தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான தெய்வேந்திரம் பாமினி (வயது 37) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .