Suganthini Ratnam / 2011 நவம்பர் 01 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் மரத்தொழிற்சாலைகள் மற்றும் விறகுகாலைகள் பல பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாக அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனபரிபாலனத் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ். செயலகத்தில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இது தொடர்பான கூட்டமொன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே குறித்த அதிகாரி இவ்வாறு கூறியதாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சுத் தகவல்கள் நேற்று தெரிவித்தன.
யாழ். மாவட்டத்திலுள்ள மரத்தொழிற்சாலைகள் மற்றும் விறகுகாலைகளிடமிருந்து தற்போது சுமார் 450 முதல் 600 வரையில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் இதனைப் பரிசீலித்து அனுமதி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும் மரத்தொழிற்சாலைகள் மற்றும் விறகுகாலைகளை பார்வையிட்டு அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் போதியளவில் இல்லாமையால் சற்று காலதாமதம் ஏற்படுவதாகவும் குறித்த அதிகாரி கூறியதாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சுத் தகவல்கள் குறிப்பிட்டன.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .