2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

A.P.Mathan   / 2011 நவம்பர் 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்களின் மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, வீட்டுத்திட்டம், விவசாய அபிவிருத்தி, மீன்பிடி, குடிநீர்த் திட்டம், சுகாதார சேவைகள், மின்சார விநியோகம், கல்வி அபிவிருத்தி, உள்ளூர் கைத்தொழில் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சரவணபவன், திருமதி விஜயகலா மகேஸ்வரன், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் யாழ்., கிளிநொச்சி அரச அதிபர்கள், யாழ். மாநகர முதல்வர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X