2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட அபிவிருத்தியாக யாழ். மாவட்ட கடற்றொழில்: கடற்றொழில் அதிகாரிகள்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 02 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கைவிடப்பட்ட அபிவிருத்தியாக யாழ். மாவட்ட கடற்றொழில் இருப்பதாக கடற்றொழில் சார்ந்த அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் வடகடல் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பாக ஆராயப்படவில்லையெனவும் யாழ்ப்பாணத்தின் முக்கிய அபிவிருத்தியான கடற்றொழில் பற்றி எந்தவித கணினி விளக்கமும் வழங்கப்படவில்லையெனவும்  அது பற்றி அரச அதிகாரிகள் ஆராயவில்லையெனவும்  கடற்றொழில் சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

யாழ். மாவட்டத்தில் 20 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பங்கள் கடற்றொழிலை மாத்திரமே நம்பி  வாழ்பவர்கள் ஆவர்.  அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இது பற்றி ஒரு விடயமும் ஆராயப்படாதுள்ளதால் ஏதும் உள்நோக்கம் இருக்குமென தாங்கள் கருதுவதாகவும் கடற்றொழில் சார்ந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்றொழில் அபிவிருத்தித்திட்டம், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலைமை மற்றும் கடற்றொழிலின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படாமல் யாழ்ப்பாணம்  மற்றும் கிளிநொச்சி அபிவிருத்திக்குழுக் கூட்டம் முற்றுப்பெறாத முடிவுகளோடு முடிவடைந்ததாக யாழ். கடற்றொழில் சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X