Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மிக நீண்டகாலமாக பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினர் அமைதியான முறையில் ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இவர்கள் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மிக நீண்டகாலமாக பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி கடந்த ஜுலை முதல் சகல பல்கலைக்கழகங்களின் நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட போதனை சாரா ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி வருகின்றமை தாங்கள் அறிந்ததே.
சுவரொட்டிப் போராட்டங்கள் (11.7.2011, 01.08.2011) பொதுக்கூட்டங்கள் (19.07.2011), பிக்கெட்டிங் போராட்டம் (உயர்கல்வி அமைச்சின் முன்பு 04.08.2011) ஆகியவற்றை மேற்கொண்ட பின்னர் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்ட உத்தேச சம்பளத் திட்டத்தை தயாரித்து வழங்குமாறு தொழிற்சங்க கூட்டுக்குழுவைக் கேட்டுக்கொண்டார். இந்த உத்தேச சம்பளத்திட்டம் 10.08.2011 உயர் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. உயர் கல்வி அமைச்சு அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளித்தது. ஆனால் ப. மா. ஆ. நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே 07.09.2011 இல் சகல பல்கலைக்கழகங்களிலும் பிக்கெட்டிங் போராட்டமும் 12.09.2011 ஒரு நாள் சுகவீன விடுப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் சம்பளம் மற்றும் ஆளணி ஆணைக்குழு, திறைசேரி, உயர்கல்வி அமைச்சு, ப. மா. ஆ. குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ப. மா. ஆ. குழு அதிகாரிகள் உத்சே சம்பளத்திட்டம் குறித்து எத்தகைய கருத்தையும் வெளிவிடாத காரணத்தால் அவர்களுக்கு இரு வாரகால அவகாசமும் அதன் பின்னர் திறைசேரிக்கு இரு வாரகால அவகாசமும் வழங்குவதென சம்பள மற்றும் ஆளணி ஆணைக்குழு தீர்மானித்தது.
இதன் பின்னர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ப. மா. ஆ. குழு அதிகாரிகள் இருவரும் தமது சார்பில் வேறொரு சம்பள திருத்தமொன்றை சமர்ப்பித்தனர். இப்பிரச்சினையை கையாள ப.மா.ஆ. குழு உபகுழுவொன்றையும் நியமித்தது.
ஆனால், எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சம்பளத் திட்டத்தைப் பற்றியோ அல்லது தமது அதிகாரிகள் சமர்ப்பித்த திட்டத்தைப் பற்றியோ தனது கருத்தை வெளியிடாத ப.மா.ஆ. குழு 'போதனைசாரா ஊழியர்களின் சம்பளத்தை திருத்தியமைப்பதில் தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை' என்பதை மட்டுமே தெரியப்படுத்தியுள்ளது. எனவே பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கலேற்பட்டுள்ளது.
எனவே சம்பளம் மற்றும் ஆளணி ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட ஒரு மாதகால அவகாசமும் முடிவடைந்த நிலையில் தொழிற்சங்கங்கள் 02.11.2011 புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென தீர்மானித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
20 minute ago