2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 'உள்ளூராட்சி முறைமை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு'

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட  உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்களுக்கான இரு நாள் 'உள்ளூராட்சி முறைமை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு' யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். நாவலர் வீதியிலுள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமையும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் காலை 9 மணிக்கு இந்த செயலமர்வு ஆரம்பமாகவுள்ளது.

சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் என்னும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனமும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையமும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான இயக்கமும் இணைந்து இந்த செயலமர்வை நடத்துகின்றன. தமிழ், சிங்கள புலமையாளர்கள் வளவாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ள இச்செயலமர்வு தமிழ்மொழியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளர் எஸ்.ரங்கராஜன், யாழ் மாநகரசபை ஆணையாளர் எம்.எஸ்.சரவணபவ, பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த சிறியானி விஜயசுந்தர, சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன,  மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X