2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கோப்பாய் ஆசிரிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரிய கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்த  ஆசிரிய மாணவர்கள் 223 பேருக்கு சான்றிதழ் வழங்கும் மற்றும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கோப்பாய் கலாசாலை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன்,  வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

கோப்பாய் கலாசாலை அதிபர் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, கோப்பாய் கலாசாலையின் பயன்பாட்டுக்காக கணினியும்  அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X