2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'வடகிழக்கில் அரசுடன் இணைந்து மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்'

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கடந்த 30 வருடங்களாக யுத்த சூழலில் கஷ்டமான நிலைமையில்  வாழ்ந்து வந்த நீங்கள் இன்று நாட்டின் நல்லாட்சியைப்; பெற்றுள்ளீர்களென 51ஆவது படைப்பிரிவின் தளபதி ஏ.பி.விக்கிரமரெட்ண தெரிவித்துள்ளார்.

யாழ். அரியாலைப் பகுதியில் இராணுவத்தினரால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'யாழ். மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். யுத்தம் காரணமாக நிம்மதியற்ற சீரற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த மக்கள்  இன்று நிம்மதியான வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். வறியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் படைவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்துடன் இணைந்தும் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X