2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழில் உள்ளூராட்சி முறைமை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு ஆரம்பம்

Kogilavani   / 2011 நவம்பர் 04 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட  உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்களுக்கான  'உள்ளூராட்சி முறைமை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு' இன்று வெள்ளிக்கிழமை யாழ். நாவலர் வீதி, தியாகி அறக்கொடை நிலையத்தில ஆரம்பமானது.

இச்செயலமர்வில் யாழ்.பிரதேச சபைகளின் தலைவர்கள், தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

வடமாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளர் எஸ்.ரங்கராஜன், யாழ் மாநகரசபை ஆணையாளர் எம்.எஸ்.சரவணபவ, பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த சிறியானி விஜயசுந்தர, சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன,  மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த செயலமர்வில்   வளவாளர்களாக கலந்து கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X