Suganthini Ratnam / 2011 நவம்பர் 04 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் 37ஆவது தேசிய மாநாடு நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழ் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியும் ஆசிரியர்களின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.
இலங்கைத் தமிழ் ஆசிரியர்களின் தேசிய மாநாடு கடந்த 2001ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற நிலையில், பத்து ஆண்டுகளின் பின்னர் இன்று யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான எவ்.ஈ.எஸ். வதிவிடப் பிரதிநிதி பெற்றீனா மேஜர் மற்றும் சிறப்பு அதிதிகளாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான திரு.எஸ்.தண்டாயுதபாணி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் த.மகாசிவம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மலையகமென இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .