2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குமாறு பணிப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 05 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாவற்குழி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்குமாறு அத்துறைசார்ந்தவர்களுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

நாவற்குழிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 49 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சனிக்கிழமை அவரின் யாழ்.அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர். இதன்போதே அவர் இப் பணிப்புரையை வழங்கினார்.

அத்துடன் நாவற்குழிப் பகுதியில் தற்போது குடியிருக்கும் மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்கும் முகமாக எதிர்வரும் 7,8ஆம் திகதிக்குள் முழுமையான விபரங்களைச் சேகரிக்குமாறும் அதன் பின்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும் துறைசார்ந்தவர்களைக் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அவற்றைப் பார்வையிட வேண்டுமெனவும் அதுவரையில் அந்த மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு அமைச்சர்  பணிப்புரை வழங்கினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X