2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் தொழிலை மக்களுக்கான சேவையாக கருத வேண்டும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 07 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அரசாங்க வேலை செய்பவர்கள் தங்களுடைய தொழிலை மக்களுக்கான சேவையாகவே கருதி செயற்படவேண்டுமென பாரம்மரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நூவலர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்தியா போன்ற நாடுகளில் விவசாயம் செய்யும் போது மண்பரிசோதனையினை மேற்க்கொண்டே பயிரிடுகின்றனர். அதேபோல் எமது நாட்டிலும் மண்பரிசோதனை செய்து எந்த இடத்தில் எந்தப்பயிரினை மேற்கொள்வதென ஆய்வு செய்து உற்ப்பத்திகளைப் பெருக்கவேண்டும்.

அண்மைக்காலத்தில் திண்னை வேலியில் மண்பரிசோதனை மேற்க்கொண்டு பயிரிட்டு அதிகளவிலான பலனைப்பெற முடிந்தது. எனவே தற்போது மண்பரிசோதகர் பதவிக்கான நியமணக் கடிதத்தைப் பெறுபவர்கள் விவசாயத்துறைக்கு அர்பணிப்புடன் பணியாற்றவேண்டும்' என்றார்.
 
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பாரம்மரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா,வடமாகன ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், மாகாணப்பொதுச்செயலாளர் இராசநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மண்பரிசோதகர் பதவிக்கு 09 பேருக்கும், பதவிநிலை உத்தியோகத்தர் 10 பேருக்கும், முன்பள்ளி ஆசிரியர் பதவிக்கு 21பேருக்கும், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் பதவிக்கு 150 பேருக்குமான நியமனக்கடிதங்கள் பாரம்மரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X