2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உறுதிமொழி; தொண்டர் ஆசிரியர்களின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 08 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட தொடர்  உண்ணாவிரதப் போராட்டம் வடமாகாண ஆளுநரின் செயலரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான இ.இளங்கோவன் வழங்கிய உறுதிமொழியைடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி ஆறு கல்வி வலயங்களைச் சேர்ந்த வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த வடமாகாண ஆளுநரின் செயலரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான இ.இளங்கோவன், தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் குறித்து  அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசினார்
வன்னி தொண்டர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும்; நாளை நாடாளுமன்றத்தில் அவர்களின் நிரந்தர நியமனம் குறித்து அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்படுமெனவும்  இ.இளங்கோவன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X