Super User / 2011 நவம்பர் 08 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்திலுள்ள வளலா மற்றும் இடைக்காடு ஆகிய பிரதேசங்களிலுள்ள 389 குடும்பங்களை சேர்ந்த 1,320 பேரை அடுத்த இரு வாரங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு படைகளின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மஹிந்த கத்துருசிங்கவுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உயர் மட்ட சந்திப்பின் போதே இந்த அனுமதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உயர் பாதுகாப்பு பகுதியான மயிலிட்டி பிரதேசத்தில் மீனவர்கள் கடற் றொழிலில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இமல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .