2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழில் குடிநீர் வழங்கல், சுகாதாரத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 09 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடிநீர்வழங்கல், சுகாதாரத் திட்டம் சம்பந்தமாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையுடனான விசேட கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ். மாநகரசபையில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம்; மற்றும் கிளிநொச்சிக்கான குடிநீர்த்திட்டம், மக்களின் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன. இதன்போது குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் குடாநாட்டின் தீவகப்பகுதிக்கான குடிநீர்த்திட்டங்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டன.

இக்கலந்துரையாடலில் நீர்வழங்கல் சபையின் பிரதம பொறியியலாளர் பாரதிதாசன், பிரதிநிதிகளாக என்.பேற்றன் ஆகியோர் மாநகரசபை சார்பாகக் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X