2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விடுதிக் காப்பாளரை தாக்கிய யாழ். பல்கலை மாணவர்கள் இருவருக்கு இடைக்கால தடையுத்தரவு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக விடுதிக் காப்பாளரொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அப்பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவர்கள் இருவருக்கு கல்வியைத் தொடர்வதற்கான இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக நிர்வாகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.  

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை குறித்த  மாணவர்கள் இருவரும் விடுதிக் காப்பாளரொருவரை தாக்கி காயப்படுத்தியதுடன், அவர் மீது துர்வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் பல்கலைக்கழகத்தின்  நிர்வாகத்தின் கவனத்திற்கு தாக்குதல்களுக்குள்ளான விடுதிக் காப்பாளர் கொண்டுவந்ததையடுத்தே, குறித்த மாணவர்கள் இருவரும் தமது பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான இடைக்கால  தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.  

இதேவேளை, தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விடுதிக் காப்பாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X