2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2011 நவம்பர் 09 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தனியார் பாடசாலையொன்றை ஆரம்பித்து வேலைவாய்ப்பு வழங்குவதாக  கூறி யாழ். இளைஞர் மற்றும் யுவதிகளிடம் பண மோசடி செய்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று புதன்கிழமை யாழ். பொலிஸாரினால் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பிரதான சந்தேகநபர் கொழும்பில் தலைவறைவாகியுள்ளதாகவும் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X