2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உலக வங்கிக் குழு நாளை யாழ். விஜயம்

Kogilavani   / 2011 நவம்பர் 09 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைபெறும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலையை அறிவதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகளின் குழுவினர் நாளை வியாழக்கிழமை காலை யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்

இக்குழுவினர்  அண்மையில் மீளக்குடியேறிய பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேரில் ஆராயவுள்ளனர்.

அத்துடன் யாழ்.மாவட்டத்தில் புதிய வேலைத்திட்ட முன் மொழிவுகள் தொடர்பாகவும் அவற்றுக்கான நிதி நிலைமைகள் தொடர்பாகவும் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் யாழ்.அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X