Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 10 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நிஹால் பெர்ணான்டோ, யாழ்ப்பாணத்தில் உலக வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்றிட்டங்களை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கும் சமூகமளித்தார். என்ரிப் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்க்கொள்ளப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாடசாலைகள் கட்டிடங்கள் உட்பட பல திட்டங்களையும் பார்வையிட்டார்.
அத்துடன், வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களை பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் வலி வடக்குப் பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோர் கூடச்சென்று செயல் திட்டங்களை காட்டினார்கள்.
தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நடைபெறும். கட்டிட வேலைகளைப் பார்வையிடுவதையும் அவர்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி அ.ஜெயக்குமரான் மற்றும் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுடன் பிரதேச செயலாளர் பிரதேச சபைத்தலைவர் ஆகியோர் காணப்படுவதைப் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
24 minute ago