Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 10 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் தொடர்ந்து நிதி வழங்க முடியாது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி தூதுக்குழு தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
உலக வங்கி தூதுக்குழுவினருக்கும் அரச அதிபருக்குமிடையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர்,
யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் உள்ளூராட்சி திணைக்களங்கள், யாழ். மாநகர சபை வேலைத்திட்டமிடல் நிதி செலவினங்கள் தொடர்பாக சரியான அறிக்கை சமர்பிக்க வில்லை என குற்றம் சாட்டினர்.
இந்த வருடத்திற்கான உலக வங்கியின் வேலைத்திட்டத்திற்கு என 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அது திருப்தியாக அமையவில்லை எனவும் குறிப்பிட்டனர்.
உலக வங்கியின் நிதியில் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் முழுமை பெறவில்லை எனவும் எதிர்காலத்தில் உலக வங்கியின் வேலைத்திட்டத்திற்hக ஒதுக்கீடுகள் யாழில் குறைவடையும் என அவர்கள் எச்சரித்துள்ளதாக யாழ். அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டுக்காக யாழ். மாவட்டத்தில் 2,734 வேலைத்திட்டத்திற்கு 10520.43 மில்லியன் தேவையாக இருப்பதாகவும் உலக வங்கி இத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தான் உலக வங்கியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரு வாரங்களில் உயர் பாதுகாப்பு பகுதிகளில் மீளக்குடியமரவுள்ள மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காக 5 மில்லியம் ரூபா தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கியின் வடக்கு திட்டமிடல் முகாமையாளர் எஸ் மனோகரன், உலக வங்கியின் அபிவிருத்தித்திட்டமிடல் அதிகாரி நிகால் பெர்னான்டோ, உலக வங்கியின் அதிகாரி எஸ். சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
UMMPA Friday, 11 November 2011 01:42 PM
இதுதான் வேண்டும். கொடுத்த காசுக்கு வேலை முடியாவிட்டால் இன்னும் என்ன? இப்படி போடுங்க. அப்பதான் இந்த அரசு காலம் தாழ்த்தாது தீர்வு கானமுயற்சிக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
49 minute ago