Super User / 2011 நவம்பர் 11 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
ஓளிராத மின்குழிழ்களுக்கு மாதாந்த கட்டணத்தை வலி தெற்கு பிரதேச சபை கடந்த இரண்டு மாதங்களாக செலுத்தி வரும் நிகழ்வையிட்டு பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
வலி தெற்கு பிரதேச சபையினால் காங்கேசன்துறை வீதியில் பொருத்தப்பட்ட பல வீதி விளக்குகள் இரவில் ஒளிராத நிலையில் காணப்படுகின்ற போதிலும் அதனையிட்டு யாரும் நடவடிக்கையெடுக்காத நிலைமை தொடர்ந்த வண்ணம் உள்ளன.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முதல் நாள் அவசர அவசரமாக இணுவிலில் இருந்து சுன்னாகம் வரை பிரதேச சபையினால் இந்த வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன.
தற்போது இணுவிலில் இருந்து சுன்னாகம் நகரம் வரையான காங்கேசன்துறை வீதியில் சுமார் பதினெட்டு மின்குழிழ்கள் ஒளிராத நிலையில் காணப்படுவதுடன் சுன்னாகம் நகரத்தில் இருந்து பொயிமதவடி வரையான அனைத்து மின் குமிழ்களும் ஒளிராத நிலையில் காணப்படுகின்றன.
ஆனால், வலி தெற்கு பிரதேச சபையோ மாதாந்தம் உரிய கட்டணத்தை மின்சார சபைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது சம்பந்தமாக குறித்த சபையின் தலைவரிடம் கேட்ட போது தாம் மின்சார சபையுடன் இது சம்பந்தமாக கதைத்த போதும் இன்று வரை அவர்கள் நடவடிக்கை என தெரிவித்தார்.
மாதாந்தம் இலங்கை மின்சார சபை மின்சார பணிகளை மேற்கொள்வதற்ககா சுமார் 28 ஆயிரம் ரூபாவை பராமரிப்பு செலவு மற்றும் மின் கட்டணமாக அறிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
vamanan Thursday, 24 November 2011 05:59 AM
மின்குமிழ் இருக்குதா என்ன ஒளிர்வதற்கு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .