2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியின் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அனைவரினதும் ஒத்துழைப்பும் அவசியம்: சந்திரகுமார்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 11 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சியில் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பெருமளவுக்கு நிலைமையினை கட்டுப்பாட்;டிற்குள் கொண்டு வந்திருக்கின்றன. இருப்பினும் நிலைமையினை தொடர்ந்தும் இயல்பில் வைத்திருப்பதற்கு அனைத்து தராப்பினர்களதும் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது ஏன நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி அரச செயலகத்தில் இடம்பெற்ற மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்டு மீள்குடியேறி தங்களுடைய வாழ்க்கையினை படிப்படியாக கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் மக்களிடம் இவ்வாறு மனிதநேயமே அற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது இவற்றுகெதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

இதற்கு அனைத்து தரப்பினர்களதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் குறிப்பாக சில ஊடகங்கள் சமூக பொறுப்பு நடந்துகொள்ளவேண்டும்.

ஊகங்களின் அடிப்படையில் வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி நிலைமையினை மேலும் பதற்றத்திற்குள்ளாக்குவதனை தவிர்த்து உண்மை நிலைமைகளை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்த அவர், இந்த மாவட்டத்தினது பாதுகாப்பிற்காகவும் மக்களின் இயல்பான வாழ்வுக்காவும் பொலிஸ் இரானுவத்தினர் அதிகாரிகள் மக்கள் அமைப்பினர் என அனைவரும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரச அதிபர் ஸ்ரீணிவாசன், பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் சாலியசில்வா, இராணுவ பொறுப்பதிகாரி பிரிகேடியர் ஹத்துருசிங்க, பிரதேச செயலாளர்கள் ஈபிடிபி கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன, பிரதேச சபை தலைவர்கள் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .