2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உள்நாட்டு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் பேச்சின் மூலம் தீர்வு காண வேண்டும்:சியாம் சரண்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 14 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இருதரப்பும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வைக் காணவேண்டும். ஏனைய நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டாலும் தீர்வு காணமுடியாது' என இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 'இந்திய வெளியுறவுக் கொள்கையும் இலங்கையுடனான நட்புறவும்' என்ற கருப்பொருளில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நீண்டு கொண்டு செல்லும் இலங்கைத்தீவின் இன ரீதியிலான பிச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சுயாதீனமான அரசியல் அபிலாசைகளுடன் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

13ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தங்களுடைய நாட்டின் நலன்கருதி இனரீதியான பிரச்சினைகள் அனுகப்பட வேண்டும.; அத்தோடு இலங்கையின் கொள்கையில் இந்தியா எந் வித தாக்கத்தையும் செலுத்தாது. செலுத்தவும் மாட்டாது.

இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியத்திலிருந்து மிக நெருக்கமான நாடுகள். இந்திய வெளியுறவுக் கொள்ளையில் இந்தியா எந்த விடயத்திலும் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளாது.

தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கும் கடல் எல்லைகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளில் இருதரப்பும் பேசினால் தான் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதைத்தான் இந்திய அரசும் எதிர்பார்க்கிறது.

இலங்கையின் நல்ல நண்பனாக இந்தியா இருக்கிறது. இலங்கைத் தீவில் பிராந்திய நலன்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், பாதுகாப்பு தொடர்பில் இருநாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகிறது' என்றார்.

இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசியல் துறைசார்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இராணுவத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • மூதூர் அமுதன் Tuesday, 15 November 2011 01:07 AM

    ஐயா சியாம் சரண் அவர்களே தமிழர்களையும் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தையும் அழித்து ஒளித்து விட்டு உள்நாட்டு பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இருதரப்பும் பேச்சின் மூலம்தீர்வு காண வேண்டும் என்று கூறுவதில் என்ன ஞாயம் இருக்கின்றது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X