2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பணத்தில் கடுகதி மின்சார விநியோகத்திட்டம்

Kogilavani   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்ப்பணத்தில் கடுகதி மின்சார விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்.குடாநாட்டில் மின்விநியோகம் சீராகிவிடும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர் டி.கே. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.குடாநாட்டில் மின்சாரத்தை சீராக வழங்குவதற்காக புதிய ஐந்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டமானது கடுகதி மின்சார விநியோகத்திட்டமாகும். இத்திட்டத்தினூடாக யாழ்ப்பாணத்தின் முழுமையான பிரதேசங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.

கிளிநொச்சிக்கும் யாழ்.குடாநாடு முழுவதற்கும் லக்ஷபான மின்சார விநியோக திட்டம் 2013ஆம் ஆண்டில் கிடைக்கும். அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மின் பாவனையாளர்கள் உள்ளனர். இன்னும் மின் பாவனையாளர்களுக்கான மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு யாழ்.மாவட்டத்திற்கு தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கவில்லை. 40 மெகாபைற் மின்சாரம் தேவைக்கு 30 மெகாபைற் மின்சாரம் தான் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆசிய வங்கியின் உதவியுடன் சுன்னாகம், சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய இடங்களில் உப மின்விநியோக நிலையங்களும் அமைக்கப்பட்டு  வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .